விண்வெளிக்கு சமோசா எடுத்துச் சென்ற சுனிதா வில்லியம்ஸ்!

Estimated read time 1 min read

நாசா விண்வெளி வீராங்கனையான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், விண்வெளிக்கு சமோசாவை எடுத்துச் சென்றுள்ளார்.

சுனிதா வில்லியம்ஸ் போயிங் நிறுவனம் உருவாக்கிய விண்வெளி ஓடம் வாயிலாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு 3-ஆவது முறையாக சென்றுள்ளார்.

அவர் அப்போது இந்தியாவின் பிரத்யேக சிற்றுண்டியான சமோசாவை எடுத்துச் சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல சிறிய விநாயகர் சிலையையும் சுனிதா வில்லியம்ஸ் எடுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author