சக்கரத்தாழ்வார் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

Estimated read time 1 min read

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அடுத்துள்ள ராவத்தநல்லூரில் 360 ஆண்டுகளுக்கு முன்பு பழமையான விஜயவல்லி- சமேத ஶ்ரீ சக்கரராஜ சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் சுயம்பு மூர்த்தியான சக்கரத்தாழ்வார் எந்திர ரூபத்தில் காட்சி தருகிறார். இந்த திருக்கோவிலின் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது.

இந்த கோவிலில் மகா கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன், யாகசாலை துவங்கியது.

பின்னர், வாஸ்து ஹோமம், ரக்ஷா பந்தனம், , சாற்றுமடை தீர்த்த பிரசாத விநியோகத்துடன் முதல் கால யாக பூஜைகள் நிறைவடைந்தது. இரண்டாம் காலையாக யாகபூஜையில் விசேஷத் திருமஞ்ஜனம், சதுஸ்தான அர்ச்சனம், மூலமந்த்ர- முக்ய மந்த்ர ஹோமம், ஸாந்தி ஹோமம், பூர்ணாஹீதி சாற்றுமறை, சயனாதி வாஸம், சுப்ரபாதம், விஸ்வரூபம், சதுஷ்டான அர்ச்சனம்,

ஹோமம் ப்ராயசித்த ஹோமங்கள் நடைபெற்றன.

தொடர்ந்து, சுதர்சன ஹோமம், மகா ஸாந்தி ஹோமங்களுடன், மூன்று நாட்களாக 5 கால பூஜைகள் நிறைவடைந்த நிலையில், இன்று காலை சிறுங்கட்டூர் ஸ்ரீ-தராச்சார் ஸ்வாமி ஜெய வீர ஆஞ்சநேயர் பக்த-பாகவத ஆச்சரிய பெருமக்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்ப கலக்சத்திற்கு, புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

Please follow and like us:

You May Also Like

More From Author