சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை…. ஐயப்ப பக்தர்களுக்கு வெளியான செய்தி…!!!

Estimated read time 0 min read

கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாசி மாத பூஜைகளுக்காக நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை நடை திறக்கப்படவுள்ளது.

மகர விளக்கு பூஜைகளுக்குப் பிறகு நாளை மாசி மாத பூஜைக்காக கோவில் திறக்கப்படுகிறது. நாளை மாலை 5 மணிக்கு நந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைப்பார்.

நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை முதல் வரும் 18ஆம் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும், வனத்துறையும் இணைந்து செய்து வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author