ஜன.14, 15 தேதிகளில் இவர்கள் மட்டும் சபரிமலைக்கு வரவேண்டாம்… தேவஸ்தானம் அறிவிப்பு…!!

Estimated read time 0 min read

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகின்றன. இதனால் கூட்ட நெரிசலும் ஏற்படுகிறது.

இதை கருத்தில் கொண்டு தேவசம் போர்டு சபரிமலையில், தரிசனத்துக்காக கூடுதலாக ஒருமணி நேரம் நீட்டித்துள்ளது. அதன்படி, மாலை 4 மணிக்கு பதிலாக பிற்பகல் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் ஜன.14, 15 தேதிகளில் பெண்கள், குழந்தைகள் சபரிமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று திருவாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கையில், முன்பதிவு இல்லாத பக்தர்கள் யாரும் சன்னிதானத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். ஜன.15இல் முன்பதிவு செய்த 40,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர்.

திருவாபரணம் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்ட பின்பு ஜன.15 மாலை 6.30 மணிக்கு தீபாராதனை நடைபெறும்

Please follow and like us:

You May Also Like

More From Author