இத்தாலி செல்கிறார் பிரதமர் மோடி!

Estimated read time 1 min read

ஜி-7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று இத்தாலி செல்கிறார்.

ஜி-7 மாநாட்டில் பங்கேற்க வருமாறு இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மெலோனி பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதனையடுத்து பிரதமர் மோடி இன்று இத்தாலி செல்கிறார். ஜி-7 மாநாட்டில் உரையாற்றுவதுடன், ஜி-7 உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் தனிப்பட்ட முறையில் பிரதமா் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

அமெரிக்க அதிபா் ஜோ பைடன், பிரான்ஸ் பிரதமா் இமானுவேல் மேக்ரான், ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா, கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டோர் ஜி-7 மாநாட்டில் பங்கேற்கின்றனா்.

பிரதமருடன் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கா், வெளியுறவுச் செயலா் வினய் குவாத்ரா, தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் உள்ளிட்டோரும் இத்தாலி செல்கின்றனர். ஜூன் 14-ஆம் தேதி பிரதமர் மோடி நாடு திரும்புகிறாா்.

Please follow and like us:

You May Also Like

More From Author