இந்தியாவின் மிகநீளமான கடல் பாலம்…. ஒருமுறை பயணிக்க கட்டணம் எவ்வளவு தெரியுமா…??

Estimated read time 1 min read

மகாராஷ்டிராவில் உள்ள இந்தியாவின் மிகநீளமான பாலத்தை, வரும் 12ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார்.

மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பு (MTHL) என்றழைக்கப்படும் இந்த பாலமானது, 17,843 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. 22 கி.மீ. நீளம் கொண்ட இப்பாலத்தில், ஒருமுறை பயணிக்க (வாகன ஓட்டிகளுக்கு) ரூ.350 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது தற்போது பயன்பாட்டுக்கு வரவுள்ளதால், மும்பை வாசிகள் பெரும் ஆவலுடன் உள்ளனர்.
மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்க் (எம்டிஹெச்எல்) என்பது 21.8 கிமீ தொலைவில் கட்டப்பட்டு வரும் சாலைப் பாலம், இந்திய நகரமான மும்பையை அதன் செயற்கைக்கோள் நகரமான நவி மும்பையுடன் இணைக்கிறது.

இது இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமாக இருக்கும். இந்தப் பாலம் தெற்கு மும்பையின் செவ்ரியில் தொடங்கி எலிஃபண்ட் தீவின் வடக்கே தானே க்ரீக்கைக் கடந்து நவா ஷேவாவுக்கு அருகிலுள்ள சிர்லே கிராமத்தில் முடிவடையும்.

Please follow and like us:

You May Also Like

More From Author