எல்.முருகனுக்கு அண்ணாமலை வாழ்த்து!

Estimated read time 1 min read

மத்திய இணையமைச்சர் எல்.முருகனுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் போட்டியின்றி மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மீண்டும் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கோவை வந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகனுக்கு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்தார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

கோவை சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் இன்று நடைபெறவிருக்கும், #EnMannEnMakkal பயணத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வருகை தரும், மத்திய இணையமைச்சர் எல். முருகன் அண்ணன் அவர்களை, கோவை விமான நிலையத்தில் இன்று மாவட்ட நிர்வாகிகள், தமிழக பாஜக சகோதர சகோதரிகள் சூழ வரவேற்று மகிழ்ந்தோம்.

கோவை சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் இன்று நடைபெறவிருக்கும், #EnMannEnMakkal பயணத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வருகை தரும், மாண்புமிகு மத்திய இணையமைச்சர் அண்ணன் திரு @Murugan_MoS அவர்களை, கோவை விமான நிலையத்தில் இன்று மாவட்ட நிர்வாகிகள், @BJP4Tamilnadu சகோதர சகோதரிகள் சூழ… pic.twitter.com/QLk4wFsble

— K.Annamalai (@annamalai_k) February 22, 2024

இரண்டாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, முதன்முறையாகத் தமிழகத்திற்கு வருகை தரும் அண்ணன் எல். முருகன்
அவர்கள், இன்றைய நடைப்பயணத்தில் பங்கேற்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author