குஜராத் வாலிநாத் கோயில் பிரான் பிரதிஷ்டை விழா : பிரதமர் மோடி தரிசனம்!

Estimated read time 0 min read

குஜராத்தின் மெஹ்சானா வாலிநாத் தாம் கோயிலில் நடைபெற்ற ‘பிரான் பிரதிஷ்டை’ விழாவில் பிரதமர் பங்கேற்று தரிசனம் செய்தார்.

குஜராத்தின் மிகப்பெரிய சோமநாத் கோவிலுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய சிவன் கோவிலான வாலிநாத் கோயில் மெஹ்சானா மாவட்டம்  தாராப் கிராமத்தில்  கட்டப்பட்டுள்ளது.

இந்தக் கோயில் 900 ஆண்டு வரலாறு கொண்டது. இதன் கட்டுமானப்பணி 14 ஆண்டுகளாக நடைபெற்றது. இந்த கோயிலில் மூன்று முக்கிய சிகரங்கள் உள்ளன. பிரதான கருவறையில் வலதுபுறம் ஸ்ரீ வாலிநாத் மகாதேவ் சிலை உள்ளது. இரண்டாவது கருவறையில் குரு ஸ்ரீ தத்தாத்ரேய பகவான் சிலை உள்ளது. மூன்றாவது சன்னதியின்  இடதுபுறம் குல்தேவி பரம்ப பகவதி சிலை உள்ளது.

இந்தியாவின் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர்களான சோம்புரா, ராஜஸ்தான் மற்றும் ஒடிசாவின் சிறந்த சிற்பிகளால் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. வடக்கு குஜராத்தின் முதல் பெரிய சிவத்தலம் ஆகும். கோயிலைக் கட்டுமானத்தில் பன்சி மலையின் கல்  பயன்படுத்தப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author