ஜப்பான், ஜெர்மனியை முந்துவோம்…. உலகளவில் கலக்கும் மோடி சர்க்கார்…!!

Estimated read time 0 min read

தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில்  பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை,  இன்னைக்கு  2024 ஜனவரி மாதம் 12ஆம் தேதியில் திரும்பி பார்த்தீங்கன்னா….  மிக தெளிவாக நம்மால் சொல்ல முடியும்.  ஏழு சதவீதத்துக்கு மேல தொடர்ச்சியாக வளர்ச்சி,  உலகத்திலே வேகமாக வளரக்கூடிய நாடு.

நிச்சயமாக 2047 வரும் போது உலகத்தினுடைய முதன்மை நாடாக மாறுவதற்கு எல்லா தகுதிகளும் இருக்கக்கூடிய நாடாக,  நம்முடைய பிரதமர் அவர்கள் 9 ஆண்டுகளில் மாற்றி இருக்கிறார்கள். 5ஆவது பெரிய பொருளாதார நாடாக இருந்தாலும் கூட,  நமக்கு மேல இருக்கக்கூடிய ரெண்டு நாடுகள். ஜப்பான்,  ஜெர்மனி நாடுகளையும் கூட இன்னும் மூன்று ஆண்டுகளில் முந்தி அடித்து, மூன்றாவது பெரிய நாடாக மாறப் போகிறோம்.

இதெல்லாம் நம்முடைய சிறப்பு. தனி மனிதனுடைய வருமானத்தை இரட்டிப்பாகி இருக்கிறோம்.  விவசாயிகளை மையப்படுத்தி ஆட்சி நடக்கிறது, ஏழை மக்களை மையப்படுத்தி ஆட்சி நடக்கிறது, இளைஞர்களை மையப்படுத்தி ஆட்சி நடக்கிறது, தொழில்துறையின் உடைய வளர்ச்சி பிரம்மாண்டமான வளர்ச்சி ஆக நம்முடைய நாட்டில் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இது இந்தியா முழுவதற்கும்…..  இன்னைக்கு அதேபோல தமிழகத்தில் நடக்கின்றதா ? என்பது கேள்வி என தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author