ஜம்மு-காஷ்மீரில் என்ஐஏ சோதனை!

Estimated read time 1 min read

ஜம்மு- காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 9 பேர் உயிரிழந்த நிலையில், சம்பவ இடத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

ஜம்மு- காஷ்மீரில் ரியாசி மாவட்டம் சிவ் கோரி கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு பக்தர்கள் சிலர் காட்ரா டவுன் நோக்கி பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

33 பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அங்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author