துபாயில் அமைகிறது பிரம்மாண்ட பாரத் மார்ட் : அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!

Estimated read time 1 min read

இந்திய நிறுவனங்கள் துபாயில் வர்த்தகம் செய்யும் விதமாக துபாயில் பாரத் மார்ட் என்ற பெயரில் பிரமாண்ட வேர் ஹவுசை இந்தியா அமைக்கிறது.

பாரத் மார்ட் என்பது வேர் ஹவுசிங் வசதிகளை அளிக்கிறது. இந்திய நிறுவனங்கள் துபாயில் வர்த்தகம் செய்ய விரும்பினால் இந்த வேர் ஹவுசிங் வசதியை பயன்படுத்தி கொள்ளலாம்.ஏற்றுமதியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை ஒரே கூரையின் கீழ் காட்சிப்படுத்த ‘பாரத் மார்ட்’ ஒரு தளமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

100,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்த வேர் ஹஸ் துபாயின் ஜெபல் அலி மண்டலத்தில் அமைக்கப்படவுள்ளது. இது சில்லறை ஷோரூம்கள், கிடங்குகள், அலுவலகங்கள் மற்றும் பிற வசதிகளைக் கொண்டிருக்கும். இந்த மால் வரும் 2025ஆம் ஆண்டு முதல் முழுமையாக செயல்படும் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே குடையின் கீழ் இந்திய தயாரிப்புகள் பலவற்றை வாங்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தலைவர் முகமது பின் ரஷித் அல் மக்தூம்வும் அடிக்கல் நாட்டினர்.

சீன அரசு தங்கள் நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை வெளிநாடுகளில் கிடைக்கச் செய்யும் வகையில் ட்ராகன் மார்ட் (Dragon Mart) என்ற வசதியை அறிமுகம் செய்தது.

துபாயில் சீனாவின் ட்ராகன் மார்ட் உள்ள நிலையில் இந்தியா தற்போது பாரத் மார்ட்டிற்கு அடிக்கல் நாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author