தோஹா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு : கத்தார் பிரதமருடன் ஆலோசனை!

Estimated read time 1 min read

தோஹா சென்ற பிரதமர் மோடி, கத்தார்  பிரதமர் எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியா முன்னாள் கடற்படை வீரர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு கத்தார் நாட்டுக்கு நேற்று மாலை பிரதமர் மோடி சென்றார். தோஹா சென்ற மோடிக்கு அந்நாட்டு பிரதமர் நேற்று இரவு விருந்தளித்தர். இதனைத்தொடர்ந்து கத்தார்  பிரதமர் எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியை  பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார்.

அப்போது, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, நிதி உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து  இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

முன்னதாக தனது கத்தார் பயணம் குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், கத்தார் பிரதமர் மற்றும் அந்நாட்டு உயரதிகாரிகளை சந்திக்க ஆர்வமாக உள்ளேன். இந்தியாவும் கத்தாரும் வரலாற்று ரீதியாக  நெருங்கிய  உறவை கொண்டுள்ளன.

சமீப ஆண்டுகளில், இரு நாடுகள் இடையே  வர்த்தகம், முதலீடு,கலாச்சாரம்,கல்வி, எரிசக்தி கூட்டாண்மையை வலுப்படுத்துதல்,  உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பன்முக உறவுகள் தொடர்ந்து ஆழமாகி வருகின்றன.

தோஹாவில் எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய சமூகத்தினர் இருப்பது இந்தியா-கத்தார் இடையேயான  உறவுக்கு சான்று என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மரண தண்டவை விதிக்கப்பட்ட 8 இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், கத்தார் பிரதமருடன் சந்திப்பு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Landed in Doha. Looking forward to a fruitful Qatar visit which will deepen India-Qatar friendship. pic.twitter.com/h6QHKpqYcm

— Narendra Modi (@narendramodi) February 14, 2024

Please follow and like us:

You May Also Like

More From Author