நவீன ரக MiG-29K போர் விமானங்கள் INS விக்ரமாதித்யா மற்றும் INS விக்ராந்த் போர்க்கப்பலில் இருந்து இயக்கம்!

Estimated read time 1 min read

MiG-29K கடற்படை போர் விமானங்கள் INS விக்ரமாதித்யா மற்றும் INS விக்ராந்த் போர்க்கப்பலில் இருந்து இயக்கப்பட்டன.

அரேபிய கடலில் ஐஎன்எஸ் (INS) விக்ரமாதித்யா மற்றும் ஐஎன்எஸ் (INS) விக்ராந்த் போர்க்கப்பல்களில் இருந்து நவீன ரக MiG-29K  போர் விமானங்கள் ஒரே நேரத்தில் இயக்கப்பட்டு, இரட்டை விமானம் தாங்கி போர்க்கப்பலின் செயல்பாடுகளை இந்திய கடற்படை காட்சிப்படுத்தியது.

ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகிய 2 விமானம் தாங்கி போர்க் கப்பல்கள் இந்தியா வசம் உள்ளன. 2021 டிசம்பரில் முழுமையான பழுது பார்ப்புக்காக, கர்நாடக மாநிலம் காவார் கடற்படை தளத்துக்கு விக்ரமாதித்யா போர்க்கப்பல் அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த 15 மாதங்களாக அக்கப்ப லில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன. தற்போது மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அந்தப் போர்க் கப்பல் இந்த மாதம் முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்திய கடற்படையில் உள்நாட்டில் தயாரான ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல் கடந்தாண்டு செப்டம்பரில் இணைக்கப்பட்டது. ரூ.20,000 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்த கப்பலின் எடை 45,000 டன். இதில் 30 போர் விமானங்களை நிறுத்தி வைக்க முடியும். மேலும், இந்த கப்பலில் 1,600 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் தங்கலாம்.

தற்போது இதில் நவீன ‘எம்.எப்.ஸ்டார்’ என்ற ரேடார்பொருத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டில் வடிவமைக்கப்பட்ட இந்தரேடார் மூலம் கண்காணிப்புமற்றும் வழிகாட்டி பணிகளை திறம்பட மேற்கொள்ள முடியும். இதன்மூலம் எதிரி நாட்டு போர் விமானம்,ஏவுகணைகளை உடனடியாக கண்டறிய முடியும்.

இந்த பராக்-8 ஏவுகணை, எதிரிநாட்டு போர் விமானம் மற்றும் ஏவுகணைகளை 80 கி.மீ.க்கும் அப்பால் அழிக்கும் திறனுடையது.

எம்.எப்.ஸ்டார் ரேடார் மற்றும் பராக்-8 ஏவுகணை கருவிகள் ஏற்கெனவே கொல்கத்தா மற்றும்விசாகப்பட்டினம் வகை போர்க்கப்பல்களில் பொருத்தப்பட்டுள்ளன. இந்தாண்டு மிலன்-2024 என்ற சர்வதேகடற்படை போர்ப் பயிற்சியில் ஐஎன்எஸ் விக்ராந்த் ஈடுபடுத்தப் பட்டது.

இந்நிலையில் அரேபிய கடலில், ஐஎன்எஸ் (INS) விக்ரமாதித்யா மற்றும் ஐஎன்எஸ் (INS) விக்ராந்த்  ஆகிய போர்க்கப்பல்களில் இருந்து நவீன ரக MiG-29K போர் விமானங்கள் ஒரே நேரத்தில் இயக்கப்பட்டு, இரட்டை விமானம் தாங்கி போர்க்கப்பலின் செயல்பாடுகளை இந்திய கடற்படை காட்சிப்படுத்தியது. இந்நிகழ்வு இந்திய கடற்படையின் பலத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author