பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் சாதனைகள்! – மத்திய அமைச்சர் பெருமிதம்!

Estimated read time 0 min read

இந்தியாவின் சாலையோர வியாபாரிகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பெருந்தொற்று காலத்தின்போது, பிரதமரின் ஸ்வநிதி திட்டம் தொடங்கப்பட்டது என்றும், சாலையோர வியாபாரிகளின் சுயதொழில், தன்னம்பிக்கை, சுயமரியாதை ஆகியவற்றை மீட்டெடுப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பிரதமர் ஸ்வநிதி மெகா முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, 10,000 சாலையோர வியாபாரிகளுக்குக் கடன்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாடு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் சாதனைகள் குறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது, இந்தத் திட்டம் மூலம் 60 லட்சத்து 94 ஆயிரம் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரத்து 678 கோடி மதிப்பில், 80 லட்சத்து 42 ஆயிரத்துக்கும் அதிகமான கடன்களை வழங்கப்பட்டுள்ளது.

முதல் தவணையில் ரூ.10 ஆயிரம் வரையிலும், பின்னர் இரண்டாவது மற்றும் மூன்றாவது தவணைகளில் முறையே ரூ.20 ஆயிரம் மற்றும் ரூ.50 ஆயிரம் வரையிலும் மூலதனக் கடன் வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டம் சாலையோர வியாபாரிகளின் நிதி உள்ளடக்கத்திற்கு வழிவகுத்தது மட்டுமல்லாமல், அவர்களின் மரியாதை மற்றும் கண்ணியத்திற்கும் வழிவகுத்துள்ளது.

இப்போது, சாலையோர வியாபாரிகள் முறைசாரா கடன்களை நம்பியிருக்க வேண்டியதில்லை. அவர்கள் அதிக வட்டி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. கடன் வாங்குவதற்கு அவர்களுக்கு மாற்று வழியை அரசு வழங்கியுள்ளது என்று கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author