பிரபல வானொலி தொகுப்பாளர் அமீன் சயானி காலமானார்

Estimated read time 0 min read

பிரபலமான “பினாகா கீத் மாலா” நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற பிரபல வானொலி தொகுப்பாளர் அமீன் சயானி 91 வயதில் காலமானார் என்ற செய்தி வெளியாகி உள்ளது.

இந்த தகவலை அவரது மகன் ரஜில் சயானி தெரிவித்துள்ளார்.
செவ்வாய்கிழமை இரவு அமீன் சயானிக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை.

“எச்என் ரிலையன்ஸ் மருத்துவமனையில் இரவு 7:00 மணியளவில் மாரடைப்பால் அவர் காலமானார்” என்று ரஜில் சயானி பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவிடம் கூறிள்ளார்.

ரேடியோ சிலோனில் சில நிகழ்ச்சியில் பேசி புகழ்பெற்ற அவரது குரல் இன்னும் பல நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்துள்ளது.

அவர் மும்பையில் ஒரு பன்மொழி குடும்பத்தில் டிசம்பர் 21, 1932 இல் பிறந்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author