பீகாரில் மீண்டும் ஜேடியு, பாஜக கூட்டணி…. அரசியலில் பரபரப்பு…!!!

Estimated read time 0 min read

எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் வெளியேறவுள்ளதாக பரவும் தகவலை உண்மைப்படுத்தும் வகையில், அம்மாநிலத்தில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து புதிய அரசு பதவியேற்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டு ஆர்ஜேடி கட்சியுடன் கூட்டணியமைத்து நிதிஷ்குமார் ஆட்சி நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், மீண்டும் பாஜக கூட்டணியில் இணையவுள்ளதாகவும், இதில் பாஜகவுக்கு இரண்டு துணை முதலமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் பதவி வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ‘இந்தியா’ கூட்டணியில் தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சி பிற கூட்டணி கட்சிகளை அனுசரித்து செல்லாததே இத்தகைய முடிவுக்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author