மக்களவையில் பிரதமர் மோடி பேசியது என்ன?

Estimated read time 1 min read

நாடாளுமன்ற கூட்டத்தில் ஜனவரி 31ஆம் தேதி உரையாற்றியிருந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. இந்நிலையில் மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், நாடாளுமன்றத்தில் அனைவரும் குடியரசுத் தலைவருக்கு பின்னால் அனுபவித்து வந்தோம். எதிர்க்கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை. 75வது குடியரசு தினம், புதிய நாடாளுமன்ற கட்டிடம், செங்கோல் என அனைத்தும் மிக சுவாரசியமாக இருந்தது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் குடியரசு தலைவர் ஆற்றிய உரையை என்றும் நினைவில் வைத்திருப்போம்.

இன்னும் பல ஆண்டுகள் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினருக்கான வரிசையில் அமர்ந்திருக்கும். தேர்தலில் போட்டியிடும் சக்தியே எதிர்க்கட்சிகளுக்கு இல்லை என்பதால் அவர்கள் வெற்றி பெற வாய்ப்பே இல்லை.

பத்தாண்டில் நாடு மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளது. அதையே குடியரசுத் தலைவர் உரை பிரதிபலிக்கிறது. இளைஞர் பெண்கள், விவசாயிகள், ஏழைகள் ஆகிய 4 சக்திகளை பற்றி பேச உள்ளோம். நாட்டை பிளவுபடுத்துவதை எதிர்க்கட்சிகள் நிறுத்துங்கள்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் நீண்ட நாள் எதிர்க்கட்சி வரிசையிலே இருப்பர் என எனக்கு தெளிவாகிறது. நீண்ட காலம் எதிர்க்கட்சியாகவே இருக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் உறுதியை நான் பாராட்டுகிறேன் என விமர்சித்தார்.

மேலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் பலருக்கு தேர்தலில் போட்டியிடவே துணிச்சல் இல்லை. எதிர்க்கட்சி எம்பிக்கள்

நாடாளுமன்றத்திற்கு வெளியில் இருக்கவே எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன. எதிர்க்கட்சிகளின் விருப்பத்தை மக்கள் தேர்தல் மூலம் நிறைவேற்றுவார்கள். எதிர்க்கட்சிகளின் தற்போதைய நிலைக்கு காங்கிரஸ் கட்சியே காரணம்.

கூட்டணி கட்சிகளின் திறமைகளை காங்கிரஸ் வீணடிக்கிறது.

தொடர்ந்து சமுதாயத்தை மதத்தின் அடிப்படையில் பிளவு படுத்த வேண்டாம், ஒரு முகத்தை முன்னிலைப்படுத்த மீண்டும் மீண்டும் முயற்சிப்பதால் காங்கிரசை இழுத்து மூடும் நிலை. குடும்ப அரசியல் செய்வதால் மக்களின் பிரச்சினைகள் எதிர்க்கட்சிகளுக்கு தெரிவதில்லை.எத்தனை காலத்திற்குதான் இப்படி நாட்டை பிளவுபடுத்துவீர்கள்?

உலகின் நலனுக்கு இந்தியா பாடுபடுவதை ஜி-20 மாநாடு மூலம் உலக தலைவர்கள் புரிந்து கொண்டனர். வந்தே பாரத், புதிய நாடாளுமன்ற கட்டிடம், மேக் இன் இந்தியா உள்ளிட்டவை நாட்டின் சாதனைகள். நாங்கள் பேசுவது எங்களின் சாதனையை அல்ல, நாட்டின் சாதனையைப் பற்றி பேசுகிறோம். காங்கிரஸ் கட்சியின் முடிவு காலம் வந்துவிட்டது.

காங்கிரஸ் கட்சியால் ஒட்டுமொத்த எதிர்கட்சிகளுக்குமே பாதிப்பு, ஒரே தயாரிப்பை திரும்பத் திரும்ப அறிமுகப்படுத்த காங்கிரஸ் முயற்சி செய்கிறது. இன்னும் எவ்வளவு காலத்துக்கு சமூகத்தை பிளவுபடுத்துவீர்கள்? ஒரே குடும்பத்தால் நாட்டிற்கே பாதிப்பு, நாடு வளர்ச்சி பாதையில் செல்வதாக மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். நாட்டுக்கு மிகச்சிறந்த எதிர்க்கட்சி தேவை என்பதுதான் எப்போதும் என் கருத்து. ஆனால் எதிர்க்கட்சிகள் தங்கள் கடமையை செய்ய தவறிவிட்டன.

ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒருவர் அரசியலுக்கு வரலாம், ஒரே குடும்பம் கட்சி நடத்துவது தான் குடும்ப அரசியல். ஒரு முகத்தை முன்னிலைப்படுத்த மீண்டும் மீண்டும் முயற்சிப்பதால் காங்கிரசை இழுத்து மூடும் நிலை ஏற்பட்டது.

தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைப்பது உறுதி. உலகின் மூன்றாவது பொருளாதாரம் ஆக இந்தியா உருவெடுக்கும். தன்னுடைய மூன்றாவது ஆட்சி காலத்தில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரம் ஆக மாறும். முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்திய பொருளாதாரம் வலுவாக வேகமாக முன்னேறி வருகிறது.

காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கட்சிகள் விலகிச் செல்கின்றன. காங்கிரஸ் கட்சியின் மந்தமாக ஊர்ந்து செல்லும் வேகத்திற்கு எந்த போட்டியும் இல்லை, பாஜக ஆட்சியில் கிராமப்புற ஏழைகளுக்கு 4.8 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. நகர்ப்புற ஏழைகளுக்கு 80 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. 17 கோடி மக்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால் இது போன்ற திட்டங்களை நிறைவேற்ற 3 தலைமுறைகள் ஆகும். 4 கோடி வீடுகள் கட்டும் பணியை முடிக்க காங்கிரஸ் கட்சிக்கு 100 ஆண்டுகள் பிடித்திருக்கும். காங்கிரஸ் கட்சிக்கு நாட்டை பற்றி அக்கறை இல்லை. குடும்பத்தை பற்றி தான் கவலை.

தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் நிச்சயம் வெற்றி பெறும். கடவுள் ராமர் தனது வீட்டில் மீண்டும் வீட்டில் உள்ளதை தேசமே கொண்டாடுகிறது. மக்களவைத் தேர்தலில் பாஜக மட்டும் 370 தொகுதிகள் வரை உறுதியாக வெல்வோம். பாஜக மீண்டும் ஆட்சி அமைத்து 1000 ஆண்டுகளுக்கான திட்டங்களுக்கு அஸ்திவாரம் போடுவோம். எல்லா குடும்பத்திலும் பெண்களுக்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளது, பெண்களுக்கு முழு முக்கியத்துவம் கொடுக்கும் காலம் வந்துவிட்டது. விண்வெளி துறையில் இருந்து விளையாட்டுத்துறை வரை பெண்களுக்கு அதிகாரம் அளித்துள்ளோம். 3 கோடி பெண்களை பாஜக அரசு லட்சாதிபதியாக உருவாக்கி உள்ளது.

மேலும் ஓ.பி.சி பிரிவினருக்கு காங்கிரஸ் நியாயம் செய்யவில்லை. ஓ.பி.சிக்கள் ஆட்சிக்கு வருவதை காங்கிரஸ் கட்சியால் சகித்துக் கொள்ள முடியாது. 1970 இல் கர்ப்பூரி தாக்கூர் பீகார் முதலமைச்சரானபோது அவரது ஆட்சியை கவிழ்க்க காங்கிரஸ் முயன்றது. கர்ப்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டி பிரதமர் பேசினார். இந்தியர்கள் சோம்பேறிகள், புத்தி கூர்மை இல்லாதவர்கள் என நேரு கருதினார். இன்னும் 100 – 125 நாட்களில் பாஜகவின் 3வது ஆட்சிக்காலம் அமையும். ஏழைகளின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சி, பாஜக அரசு வளர்ச்சி ஒன்றையே தாரக மந்திரமாக கொண்டுள்ளது.

சோம்பேறித்தனத்தில் காங்கிரஸ் கட்சியை யாரும் விஞ்ச முடியாது. இந்தியா கூட்டணி ஆடிப்போயுள்ளது. இப்படிப்பட்ட கூட்டணியை மக்கள் எப்படி நம்புவார்கள்?.. நாட்டின் திறன் மீது காங்கிரஸ் கட்சிக்கு எப்போதும் நம்பிக்கை இருந்ததில்லை. ஏழைகளுக்கு தேவையான வாய்ப்புகள் சாதனங்களை தந்தால் ஏழ்மையை தோற்கடிப்பார்கள். எதிர்க்கட்சிகளுக்கு ஒருவர் மீது ஒருவருக்கு நம்பிக்கை இல்லை. இந்திய பொருளாதாரத்தை மீட்டது பாஜக அரசு.

விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் 2.80 லட்சம் கோடி உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. ஊழல்வாதிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் இப்போது ஏழைகளின் கையில் ஜொலிக்கிறது. அமலாக்கத்துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களிடம் இருந்து கட்டு கட்டாக பணம் பிடிபடுவது எப்படி? அமலாக்கத்துறைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் கட்டு கட்டாக பணம் பிடிபிடும்போது என்ன பதில் அளிப்பர். நாட்டை கொள்ளை அடிக்க விடமாட்டேன், கொள்ளையடித்த பணத்தை திரும்ப பெறாமல் விடமாட்டேன். பாஜக ஆட்சியில் 1 லட்சம் கோடியை அமலாக்கத்துறை கைப்பற்றி உள்ளது.

பயனாளிகளின் வங்கி கணக்கில் நாங்கள் நேரடியாக பணத்தைக் கொண்டு சேர்க்கிறோம். 2 போர் நடக்கும் போதும் கொரோனா காலத்திலும் பணவீக்கத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம். என் மீது உங்கள் கைகள் வீசும் செங்கல்லை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்துவேன். எவ்வளவு தாக்குதல் தொடுக்கப்பட்டாலும் ஊழலுக்கு எதிரான எனது போராட்டம் தொடரும். நாட்டை பலமுறை துண்டாடிய சக்திகள் மீண்டும் துண்டாட முயற்சி செய்வதாக கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author