மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு! – துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு!

Estimated read time 0 min read

மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.

கடந்த 2019ஆம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 534 லோக்சபா தொகுதிகளில் முதற்கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதன்படி மணிப்பூரில் உள் மணிப்பூர், வெளி மணிப்பூர் என இரண்டு தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

பிற்பகல் சுமார் 2 மணியளவில் துப்பாக்கிகளுடன் வாக்குப்பதிவு மையத்தை நோக்கி வந்த மர்ம நபர்கள், வானத்தை நோக்கி சுட்டதால் இந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து கலவரம் நடைபெற்ற 11 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதனையொட்டி இன்று காலை முதலே வாக்களர்கள் ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக வாக்குச்சாவடிகளில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author