மராத்தா இட ஒதுக்கீடு : 17 நாட்களுக்கு பிறகு உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் மனோஜ் ஜரங்கே!!

Estimated read time 1 min read

மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மகாராஷ்டிராவின் 3 மாவட்டங்களில் இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இட ஒதுக்கீடு கோரி, அந்த சமூக தலைவர் மனோஜ் ஜரங்கே காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

இதனையடுத்து ராத்தா சமூகத்தை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உறுதியளித்தார்.  இதனால் தன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக ஜரங்கே அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.எனினும், ஓ.பி.சி. பிரிவின் கீழ் மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கடந்த 10-ம் தேதி ஜரங்கே மீண்டும் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

மராத்தா சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் விவசாய குன்பி சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான ஆவணம் இருந்தால், அந்த நபரின் இரத்த சொந்தங்கள் அனைவருக்கும் குன்பி சாதிச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.  இந்நிலையில், 17 நாட்களாக மேற்கொண்டு வந்த உண்ணாவிரத போராட்டத்தை நிறைவு செய்வதாக ஜரங்கே இன்று அறிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author