மொபைல் ஏற்றுமதி சீனாவை அடித்து நொறுக்கிய இந்தியா!

Estimated read time 1 min read

மொபைல் போன் ஏற்றுமதியில் , இந்தியா, வேகமாக முன்னேறி சாதனை படைத்து வருகிறது. சீனா மற்றும் வியட்நாம் நாடுகளின் மொத்த ஏற்றுமதியில் 50 சதவீதத்தை இந்தியா கைப்பற்றி இருக்கிறது. அது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.

உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை PLI (பிஎல்ஐ) திட்டங்கள் நாட்டின் உற்பத்தி, வேலைவாய்ப்பு, மற்றும் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகின்றன.

2020ம் ஆண்டில் ஆத்ம நிர்பார் பாரத்-சுயசார்புடைய இந்தியா என்ற நோக்கத்தில் பிரதமர் மோடி உருவாக்கிய PRODUCTION LINKED INCENTIVES-PLI திட்டங்கள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன.

14 துறைகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட, உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை என்னும் PLI திட்டத்தினால் இந்திய மொபைல் உற்பத்தியும் ஏற்றுமதியும் வரலாறு காணாத வளர்ச்சியைக் கண்டுள்ளது.

சர்வதேச வர்த்தக மையத்தின் அறிக்கையில், இந்த ஆண்டு, சீனா மற்றும் வியட்நாமில் இருந்து மொபைல் போன் ஏற்றுமதி முறையே 2.78 சதவீதம் மற்றும் 17.6 சதவீதம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் ​இந்தியாவின் ஏற்றுமதி 40.5 சதவீதம் உயர்ந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் மொத்தமாக 9.4 பில்லியன் டாலர் ஏற்றுமதி குறைந்துள்ள நிலையில், மொத்த சரிவில் கிட்டத்தட்ட 50 சதவீதத்தை இந்தியா கைப்பற்றியுள்ளது என்பதையும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

PLI திட்டத்தின் கீழ் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் உற்பத்தி சாதனங்களைத் தயாரிக்கிறது. Foxconn, Pegatron மற்றும் Wistron ஆகிய தொழிற்சாலைகளில் ஆப்பிள் ஐபோன்களே உற்பத்தி செய்யப் படுகின்றன. இதனால், இந்தியாவிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளில், ஆப்பிள் ஐபோன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்குச் சமர்ப்பிக்கப் பட்ட தரவுகளின்படி, நடப்பு நிதியாண்டில் ஆப்பிள் ஐபோன் உற்பத்தி 14 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் ஐபோன் ஏற்றுமதி 10 பில்லியன் அமெரிக்க டாலராக கூடியிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மொபைல் போன் ஏற்றுமதி 15.6 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இதில் 65 சதவீதம் ஐபோன் ஏற்றுமதியாக உள்ளது. இந்த ஆண்டு, ஐபோன் ஏற்றுமதி, 29 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஐபோன் ஏற்றுமதி, இந்தியாவின் மின்னணு ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கை விட அதிகமாகும்.

இப்படி, சீனாவுக்கு பிறகு ஐபோன்களுக்கான இரண்டாவது உற்பத்தித் தளமாக இந்தியா உருவாகி உள்ளது. மேலும் சர்வதேச மொபைல் போன் சந்தையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது.

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மற்றும் Huawei போன்ற சில சீன நிறுவனங்களின் தொழில்நுட்ப தயாரிப்புகளுக்கு தடை ஆகிய காரணங்களால், சீனாவின் மொபைல் ஏற்றுமதி வெகுவாக பாதிப்படைந்துள்ளது.

சீனாவின் உற்பத்தி சக்திக்கு இந்தியா மாற்றாக உருவெடுத்து வளர்வது, சீனாவுக்கு பெருங் கவலையை ஏற்படுத்தி உள்ளது என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

Please follow and like us:

You May Also Like

More From Author