ராகுல் காந்தியின் ‘கான்வாய்’ வாகனம் மீது சிலர் தாக்குதல்….

Estimated read time 1 min read

பீகாரில் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையின் போது அவரது வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் ‘இந்திய ஒற்றுமை பயணம்’ நடந்து வரும் நிலையில் வாகனம் (கான்வாய்) மீது நடத்தப்பட்ட தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பீகார் மாநிலம், மால்டா என்ற இடத்தில் சென்ற போது ராகுல் காந்தியின் வாகனம் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் ஒற்றுமை யாத்திராய் நடைபெற்று வரும் நிலையில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் யார் கைது செய்யப்பட்டுள்ளார்கள்? யார் தாக்குதலுக்கு பின்னால் இருக்கிறார்கள்? என்று தெரிவிக்கப்படவில்லை.

இந்த தாக்குதலில் அந்த காரின் பின் கண்ணாடி உள்ளிட்டவை உடைந்துள்ளது. யார் இந்த தாக்குதலை நடத்தினார்கள் என்ற விவரம் தெரியவில்லை.

இந்த தாக்குதல் நடந்த இடம் பீகார் மற்றும் மேற்குவங்க மாநிலத்தின் எல்லை பகுதியில் தான் நடந்துள்ளது. மால்டா என்ற பகுதியில் நடந்தது.

இந்த விஷயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட எந்த ஒரு காவல்துறையும் இதுவரை பதில் அளிக்கவில்லை.

தற்போது அவருக்கான பாதுகாப்பு வாகனத்தில் ராகுல் காந்தி ஓய்வெடுத்து வருகிறார். ராகுல் காந்திக்கு எந்த பாதிப்பும் இல்லை..

#BREAKING

WATCH- Congress leader #RahulGandhi‘s car vandalized during ‘Bharat Jodo Nyay Yatra’ in West Bengal’s Malda. pic.twitter.com/aT5vGgLwRJ

— TIMES NOW (@TimesNow) January 31, 2024

Please follow and like us:

You May Also Like

More From Author