வாட்ஸ்அப்பில் ‘விக்சித் பாரத்’ செய்திகளை அனுப்புவதை நிறுத்தவேண்டும்: மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

Estimated read time 1 min read

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் வாட்ஸ்அப்பில் ‘விக்சித் பாரத்’ செய்திகளை அனுப்புவதை நிறுத்துமாறு மத்திய அரசை இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் (ECI), மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு(MeitY) அனுப்பிய உத்தரவில்,”தேர்தல் நடத்தை விதிகள் தற்போது அமலில் உள்ளது.

எனவே ‘Viksit Bharat’ செய்திகளை வாட்ஸ்அப்பில் அனுப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

அதோடு, இந்த விவகாரத்தில் அமைச்சகத்திடமிருந்து இணக்க அறிக்கையை கோரியுள்ளது தேர்தல் ஆணையம்.
தேர்தல் அறிவிப்பு மற்றும் எம்சிசி அமலுக்கு வந்த போதிலும், மத்திய அரசின் முன்முயற்சிகளை எடுத்துரைக்கும் வகையில் ‘விக்சித் பாரத் சம்பார்க்’ கீழ் அனுப்பப்பட்ட செய்திகள், குடிமக்களின் தொலைபேசிகளில் விநியோகிக்கப்படுவதாக பல புகார்கள் வந்துள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author