அமெரிக்காவில் கார், வேன் நேருக்கு நேர் மோதி விபத்து – 8 பேர் உயிரிழப்பு!

Estimated read time 0 min read

அமெரிக்காவின் கலிபோர்னியா அருகே கார், வேன் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில், 8 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மதீரா கவுன்டி பகுதியில் கார், வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இரண்டு வாகனங்களின் முன்பக்கங்கள் பலத்த சேதமடைந்துள்ளது. இதில், வேனில் இருந்த 7 பேர் உயிரிழந்தனர். மேலும், கார் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் வேனில் இருந்த நபர் ஒருவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த 8 பேரின் உடல்களையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வேனில் 8 பேர் பயணித்ததாகவும், அதில் பெரும்பாலானோர் சீட் பெல்ட் அணியாதது விபத்தில் அதிக உயிரிழப்பு ஏற்படுவதற்கு காரணம் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து அந்நாட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்காக அவென்யூ 7 வெஸ்ட் பகுதியில் சாலை எண் 21, 22 ஆகியவை மூடப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author