அமெரிக்க செனட் பதவிக்கு போட்டியிடும் அஸ்வின் ராமசாமி?

Estimated read time 1 min read

24 வயதான மென்பொருள் பொறியியலாளர் அஸ்வின் ராமசாமி, மாநில செனட் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் அமெரிக்க அரசியலில் நுழையும் முதல் Gen Z இந்திய-அமெரிக்கர் என்ற பெயரை எடுத்துள்ளார்.

ஜெனரேஷன் Z என்பது 1997- 2012க்குள் பிறந்த தலைமுறையை குறிக்கும் சொல்லாகும்.
அவர் இரண்டாம் தலைமுறை குடியேறிய இந்திய-அமெரிக்கர் ஆவார்.

அவரது பெற்றோர் 1990களில் தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு சென்றனர்.
அஸ்வின் ராமசாமி தேர்தலில் நின்று தேர்ந்தெடுக்கப்பட்டால், ஜார்ஜியாவின் 48வது மாவட்டத்தின் முதல் இந்திய-அமெரிக்க மாநில செனட்டராக அவர் இருப்பார்.

மேலும் அவர் வெற்றி பெற்றால், அவர் ஜார்ஜியாவின் முதல் Gen Z மாநில செனட்டராகவும், கணினி அறிவியல் மற்றும் சட்டப் பட்டம் பெற்ற ஒரே ஜார்ஜியா மாநில சட்டமன்ற உறுப்பினராகவும் இருப்பார்.

Please follow and like us:

You May Also Like

More From Author