இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டம்: உத்தரவை மீறிய மாணவர்களை இடைநீக்கம் செய்தது கொலம்பியா பல்கலைக்கழகம் 

Estimated read time 1 min read

அமெரிக்கா முழுவதிலும் உள்ள கல்லூரி வளாகங்களில் பெரும் பாலஸ்தீனிய ஆதரவு போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், இந்த போரட்டங்களுக்கு மையமாக இருக்கும் கொலம்பியா பல்கலைக்கழகம், எச்சரிக்கையை மீறி போராட்டம் செய்த போராட்டக்காரர்களை திங்களன்று இடைநீக்கம் செய்யத் தொடங்கியது.
ஏப்ரல் 18 அன்று கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக காசா போரை நிறுத்தக்கோரி இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டங்கள் ஆரம்பித்தன.
அப்போது, சுமார் 100 போராட்டக்காரர்கள் முதன்முதலில் கைது செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் போராட்டங்கள் வெடித்தன.
இந்நிலையில், நியூயார்க்கில் உள்ள மதிப்புமிக்க கொலம்பியா பல்கலைக்கழக அதிகாரிகள், மதியம் 2:00 மணிக்குள் (1800 GMT) போராட்ட முகாமை அகற்ற வேண்டும். இல்லையென்றால் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

Please follow and like us:

You May Also Like

More From Author