உலக பணக்காரர்கள் பட்டியலில் சுந்தர் பிச்சை!

Estimated read time 1 min read

இதுவல்லவா சூப்பர் சாதனை ? என்று சொல்லக்கூடிய அளவுக்கு ஒரு சாதனையைப் படைத்துள்ளார் கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை. அவரது சொத்து மதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ள நிலையில், உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைத்திருக்கிறார். அதை பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் பிறந்தார். அவரது தந்தை, ரகுநாத பிச்சை, பிரிட்டிஷ் கார்ப்பரேஷன் GEC-ல் மின் பொறியாளராக பணிபுரிந்தார். சுந்தர் பிச்சையின் தாயார் லட்சுமி சுருக்கெழுத்தாளர் பணியில் இருந்தார்.

சென்னையில் உள்ள அசோக் நகர் ஜவஹர் வித்யாலயா பள்ளியிலும், சென்னை இந்திய தொழில்நுட்ப கழகமான ஐ.ஐ.டி.,யில் உள்ள வன வாணி பள்ளியிலும் பள்ளி படிப்பை முடித்த சுந்தர் பிச்சை, பின்னர், கோரக்பூர் இந்திய தொழில் நுட்பக் கழகம் ஐஐடியில் உலோகவியல் பொறியியலில் பட்டம் பெற்றார்.

standford ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருள் அறிவியல் துறையில் எம்.எஸ் முடித்தார் சுந்தர் பிச்சை .மேலும் Pennsylvania பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பள்ளியில் எம்பிஏ முடித்தார்.

முதல் வேலையாக McKinsey & கம்பெனியில் ஆலோசகராக பணியில் சேர்ந்த சுந்தர் பிச்சை , 2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் தயாரிப்பு மேலாளராக சேர்ந்தார்.

google toolbar, ஜிமெயில் மற்றும் கூகுள் மேப்ஸ் உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்புக்கும், அதன் வெற்றிக்கும் , கூகுளின் முன்னேற்றத்துக்கும் பெரும் பங்கு வகித்தார் சுந்தர் பிச்சை.

2008 இல் Google Chromeன் இறுதி வெளியீட்டில் சுந்தர் பிச்சை முக்கிய பங்கு வகித்தார். Google Chromeன் வெளியீடு சுந்தர் பிச்சைக்கு அற்புதமான வெற்றியை கொடுத்தது என்றே சொல்ல வேண்டும். பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் போன்ற போட்டியாளர்களை ஓரம்கட்டி விட்டு உலகின் நம்பர் 1 browser ஆக Google Chrome மாறியது.

Google Chrome ன் அபார வெற்றியைத் தொடர்ந்து சுந்தர் பிச்சை உலக அளவில் மிகவும் பிரபலமானவராக மாறினார். கூகுள் நிறுவனத்தில் சேர்ந்து 11 ஆண்டுகளுக்குப் பிறகு , 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2015 ஆம் ஆண்டு கூகுளின் தாய் நிறுவனமாக Alphabet Inc உருவாக்கப் பட்டது.

கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக சிறப்பாக செயல் பட்ட சுந்தர் பிச்சையின் கடுமையான உழைப்பின் காரணமாக கூகுள் நிறுவனம் மேலும் மேலும் வணிகச் சந்தையில் வேக வேகமாக வளர்ந்தது. இதன் காரணமாக சுந்தர் பிச்சையும் புதிய உச்சத்தைத் தொட்டார்.

2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கூகுளின் Alphabet Inc நிறுவனத்தின் 273,328 பங்குகள் சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்டது.

பின்னர்,2019 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி அவர் Alphabet Inc நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆனார். Alphabet Inc. இன் CEO ஆக,சுந்தர் பிச்சை செய்த சாதனைகள் அதிகம் .

உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான, Google இன் தேடுபொறி, ஆண்ட்ராய்டு இயங்குதளம் மற்றும் பிற முக்கிய தயாரிப்புகளையும் செயலாற்ற வைத்தார். சுந்தர் பிச்சையின் தொழில்நுட்ப புத்திசாலித்தனம் மற்றும் சந்தை போக்குகளைப் புரிந்து கொண்டு அதை எதிர்கொண்டு சமாளித்து வெற்றி பெரும் திறமை ஆகியவை டிஜிட்டல் துறையில் கூகுள் நிறுவனத்தை அடுத்த அடுத்த கட்டத்திற்கு மின்னல் வேகத்தில் எடுத்துச் சென்றது.

2016 மற்றும் 2020ம் ஆண்டுகளில் இரண்டு முறை டைம்ஸ் இதழில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலில் சேர்ந்த சுந்தர் பிச்சையின் ஆண்டு வருமானம் 1800 கோடி ரூபாயாகும். கடந்த 2022 ஆம் ஆண்டு சுந்தர் பிச்சையின் வருமானம் 1869 கோடி ரூபாயாக இருந்தது . இது இந்தியாவின் முதன்மையான பணக்காரரான முகேஷ் அம்பானியின் சம்பளத்தை விட அதிகம் என்பது ஆச்சரியமான விஷயம்.

இன்னொரு முக்கியமான செய்தி , சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தில் சேர்ந்ததில் இருந்தே கூகுள் நிறுவனம் பங்குகளின் விலை 400 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு எனப்படும் Artificial intelligence (AI) தொழிநுட்பத்ததில் கூலி ஒவ்வொரு நாளும் இப்போது புதிய உயரங்களை தொட்டு முன்னேறிக் கொண்டே இருக்கிறது. இதனால் சுந்தர் பிச்சை உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணைந்திருக்கிறார்.

2022 ஆம் ஆண்டு ரூ 1,215 கோடியாக இருந்த சுந்தர் பிச்சையின் தற்போதைய சொத்து மதிப்பு 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது 8,342 கோடி ரூபாய் ஆகும்.

ஓவ்வொரு மாதம் சராசரியாகரூ 154 கோடிகளை தனக்கு சம்பளமாக சுந்தர் பிச்சை பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூகுள்தலைமைச் செயல் அதிகாரியான, சுந்தர் பிச்சையின் சம்பளம், அந்நிறுவனத்தில் பணியாற்றும் சராசரி ஊழியரை விட 800 மடங்கு அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும் பணக்காரர் பட்டியலில் ஒரு நிறுவனம் அல்லது தொழிலதிபர்கள் இருப்பார்கள். இரண்டுமில்லாமல் சி இ ஓ க்கள் சிலரே இருப்பார்கள். அதனால் சுந்தர் பிச்சையின் இந்த சாதனை மிகவும் பெரிதாகப் பார்க்கப்படுகிறது.

உலகத்தில் இருக்கும் அனைவரையும் ஆட்டிப்படைக்கும் கூகுள் நிறுவனத்தின் CEO-வாக இருக்கும் சுந்தர் பிச்சை, அவரின் திறமையால் இந்த உயரத்துக்கு சென்றிருப்பது அசாத்திய வெற்றியே.

இந்திய அரசும் வர்த்தகம் மற்றும் தொழில் பிரிவில் சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷன் விருதும் வழங்கி கவுரவித்தது என்பதும் குறிப்பிடத் தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author