கடலில் படகு கவிழ்ந்து விபத்து… 89 பேர் பரிதாப பலி… மீட்பு பணிகள் தீவிரம்..!!

Estimated read time 0 min read

ஐரோப்பாவிற்கு புலம்பெயர்ந்தவர்கள் சிலர் படகில் சென்றுள்ளனர். இந்த படகு மெட்டார்னியா கடற்கரையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென படகு கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த படகில் மொத்தம் 170 பேர் பயணித்துள்ளனர். இதில் கடலில் மூழ்கி 89 பேர் பரிதாபமாக இறந்தனர்.

இவர்களின் உடல்களை கடலோர காவல் படையினர் மீட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடலில் மூழ்கிய மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் நடப்பாண்டில் 5 மாதங்களில் மட்டும் இது வரை புலம்பெயர்ந்தோர் சென்ற படகு கவிழ்ந்து 5,000 பேர் வரை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

Please follow and like us:

You May Also Like

More From Author