கொடூரம்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் பலி… சோக சம்பவம்..!!!

Estimated read time 0 min read

பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வாவில் உள்ள லக்கி மார்வாட் மாவட்டத்தில் மனிதாபிமானமற்ற சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

தக்தி கேல் என்ற கிராமத்தில் உள்ள ஒரே வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 சடலங்களை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

அந்த குடும்பத்தினரின் உணவில் விஷம் கலந்து கொலையாளிகள் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர்களில் இரண்டு சகோதரர்கள், அவரது குழந்தைகள் மற்றும் வீட்டு விருந்தினர் அடங்குவர். மற்றொரு சகோதரரின் புகாரின் பேரில் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Please follow and like us:

You May Also Like

More From Author