பல்கேரியா நாட்டு அதிபர் பிரதமர் மோடிக்கு நன்றி!

Estimated read time 1 min read

கடற்கொள்ளை மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், சுதந்திரமான கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்கும் இந்தியா உறுதிபூண்டுள்ளது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கடத்தப்பட்ட பல்கேரிய கப்பல் “ருயென்” மற்றும் அதன் பணியாளர்கள் 7 பேரை இந்திய கடற்படை மீட்டது. இதற்காக பிரதமர் மோடிக்கு பல்கேரியா குடியரசின் அதிபர் ருமென் ராதேவ் தனது நன்றியை தெரிவித்தார்.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடற்கொள்ளை மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், சுதந்திரமான கடல்வழிப் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதமர் மோடி, பல்கேரியா குடியரசின் அதிபர் ருமென் ராதேவுக்கு எடுத்துரைத்தார்.

இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பதிவில்,

“பல்கேரியா அதிபரான  உங்களது செய்தியைப் பாராட்டுகிறேன். 7 பல்கேரிய நாட்டினர் பாதுகாப்பாக இருப்பதிலும், அவர்கள் விரைவில் வீடு திரும்பவுள்ளது குறித்தும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

Appreciate your message President @PresidentOfBg . We are happy that 7 Bulgarian nationals are safe and will be returning home soon. India is committed to protecting freedom of navigation and combating piracy and terrorism in the Indian Ocean region. https://t.co/nIUaY6UJjP

— Narendra Modi (@narendramodi) March 19, 2024

 

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடற்கொள்ளை மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், சுதந்திரமான கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்கும் இந்தியா உறுதிபூண்டுள்ளது’’ எனத் தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author