மலேசியாவில் நடுவானில் மோதிய ஹெலிகாப்டர்கள்! – 10 பேர் உயிரிழப்பு!

Estimated read time 0 min read

மலேசியாவில் கடற்படை ஹெலிகாப்டர்கள் ஒத்திகையில் ஈடுபட்ட போது இரு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று உரசி வெடித்து சிதறியதில் 10 பேர் உயிரிழந்தனர்.

மலேசியாவின் பெரக் பகுதியில் உள்ள ராணுவ தளத்தில் இன்று காலை 9.32 மணியளவில் நடந்த ஒத்திகையின் போது ஆர்எம்என் கடல்சார் ஆபரேஷன் ஹெலிகாப்டர் மற்றும் ஆர்எம்என் ஃபெனெக் ஹெலிகாப்டர் மோதிக்கொண்டதாக ராயல் மலேசியன் நேவி உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த ஒத்திகையில் 10 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களின் அடையாளம் காணும் செயல்முறைக்காக உடல்கள் ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைக்குழுவை நிறுவவும், இதற்கான விசாரணை செயல்முறையைப் பாதுகாக்கவும் ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளான வீடியோவை யாரும் ஒளிபரப்ப வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author