இந்தியர்களுக்கு வேலை போராட்டமா? வளர்ச்சியா?

Estimated read time 1 min read

இந்தியாவில், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களில் 86 சதவீத பேருக்குப் பணியிடத்தில் போராட்டமும், மன உளைச்சலும் இருக்கிறது என்று Gallup Global Workplace அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

Gallup Global Workplace ஆண்டுதோறும், உலக அளவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் மனநிலை மற்றும் வாழ்நிலை குறித்து அறிக்கையாக வெளியிட்டு வருகிறது.

அதன்படி இந்தாண்டும் Gallup State of the Global Workplace அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், உலகெங்கிலும் உள்ள பணியாளர்களில் 34 சதவீதம் பேர் மட்டுமே வளர்ச்சியை உணர்கிறோம் என்று கூறியுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

அதேவேளையில், 86 சதவீத இந்திய ஊழியர்கள் பணியிடத்தில் போராட்டமும், மன உளைச்சலும் இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறார்கள் என்றும்,

14 சதவீத இந்திய ஊழியர்கள் மட்டுமே பணியில் வளர்ச்சி இருப்பதை உணர்கிறார்கள் எனவும் அறிக்கையில் கூறியுள்ளது.

மேலும், மன அழுத்தம், பணப் பிரச்சனை இருப்பவர்கள் தொடர்ந்து வாழ்வில் போராடி வருவதாகவும்,

உணவு, தங்குமிடம் சரியாக இல்லாததால இந்திய ஊழியர்கள் பெரும்பாலும் துன்பப் படுகிறார்கள் என்றும் ஆய்வறிக்கை வகை படுத்துகிறது.

இந்தியா ஊழியர்கள் மட்டுமல்ல, தெற்காசியா முழுவதும் இதே நிலைமை நீடிப்பதாகவும், தெற்காசியாவை சேர்ந்த 15 சதவீத ஊழியர்கள் பிற நாடுகளில் பணியாற்றுவதன் மூலம், வாழ்வில் வளர்ச்சி கண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில், 22 சதவீத ஊழியர்கள் தங்கள் வாழ்வில் முன்னேற்றம் இருப்பதாக கூறியிருக்கிறார்கள் என்றும்,

அதேசமயம், இலங்கையில் 62 சதவீத ஊழியர்களும், ஆப்கானிஸ்தானில் 58 சதவீத ஊழியர்களும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசியாவில் உள்ள மற்ற நாடுகளை விட இந்தியாவில் தான், அதிகமானோர் தினசரி கோபத்தை அனுபவிக்கிறார்கள் என்றும்,

மற்ற நாடுகளை ஒப்பிடும் போது , இந்தியாவில் 38 சதவீத வேலை வாய்ப்புகள் நிச்சயமாக உள்ளன எனவும் Gallup Global Workplace ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author