கவிஞர் பரிமளா தேவி

Estimated read time 1 min read

Web team

kavingar_ravi-1.jpg

ஆயிரம் ஹைக்கூ !

கவிதைப்புத்தகம் !

ஒருவாசிப்பு அனுபவம் !

கவிஞர் பரிமளா தேவி !

கவிஞர் இரா.இரவி அவர்களின் ஹைக்கூ கவிதைகள் மிக அருமை. முனைவர் திரு.இரா.மோகன் அவர்களும்,முனைவர் திரு. இறையன்பு அவர்களும் எழுதியிருந்தது கவிதைகள் முழுவதையும் வாசிக்கும் எண்ணத்தைத் தூண்டியது.
இரவி அவர்கள்,
வான்,சூரியன், நிலவு,மேகம், மழை , பட்டாம்பூச்சி, ரயில் பூச்சி, எருக்கம்பூ,ரோஜா, கல்வி, மாணவன்,பாடப் புத்தகம், அரசியல்வாதிகள், மாற்றுத்திறனாளிகள்,முதியோர் இல்லம்,நெகிழிப்பை என எல்லாவற்றையும் எடுத்து ஏகப்பட்ட விசயங்களை எழுதியிருக்கிறார். ரசித்துப் படித்தேன் படைக்கத் தோன்றியது. படைத்தேன்.. பாராட்டுக்கள் பெற்றேன். பரவசமானேன்.
நண்பர்களே நீங்களும் படியுங்கள். புதிய சிந்தனை பிறக்கும். படைக்கலாம்.
இரவி அவர்கள் இன்னும் பல ஆயிரம் ஹைக்கூ படைக்க வாழ்த்தலாம். இது இவருடைய 12 வது நூல். இவர் ஹைக்கூ கவிதைகள் பல்கலைக்கழகம் கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன என்பது மிகப் பெருமை. எனக்குப் பிடித்த சில
கவிதைகள்!

தூணிலும் இருப்பான்
துரும்பிலும் இருப்பான் சரி
ஆலயங்கள் எதற்கு?
—————————–
வேகமாய் விற்கிறது
நோய் பரப்பும் குளிர்பானம்
வருத்தத்தில் இளநீர் !
————————–
குஞ்சுகள் மிதித்து
கோழிகள் காயம்
முதியோர் இல்லம் !
——————————–
மனம் வருந்தவில்லை
மங்கையர் சூடாததற்கு
எருக்கம்பூக்கள் !
————————-
யாரும் வாங்காமலே
மலர்ந்தன பூக்கள்
வாடினாள் பூக்காரி !
——————————–
காவல்துறை அனுமதியின்றி
ஊர்வலம் நடந்தது
எறும்புகள் அணிவகுப்பு !
——————————-
காதலிக்கு முத்தம்
பார்க்கவில்லை யாரும்
நிலவைத் தவிர !
————————————
முதலிடம் தமிழகம்
முட்டாள்தனத்தில்
அட்சயதிரிதியில் தங்கம் !
——————————–
சக்கரவண்டியில் சென்றேனும்
வாழ்க்கைச்சக்கரத்தை உருட்டுபவர்கள்
மாற்றுத்திறனாளிகள் !
————————————-
குடியால் அரசுக்கு கோடி
திருந்தாக் குடிமகனால்
குடும்பம் தெருக்கோடி !
—————————————–
ஆசிரியர் ::இரா.இரவி !

eraeravik@gmail.com
www.kavimalar com eraeravi.blogspot.in
பதிப்பகம்
வானதி பதிப்பகம்
23 , தீனதயாளு தெரு
தி.நகர், சென்னை _17

Please follow and like us:

You May Also Like

More From Author