வடிவேலுவை கதறடித்த சரளா..!!!

Estimated read time 0 min read

நடிகை கோவை சரளா தமிழ் படங்களில் துணை வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர். இதுவரை 750 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

‘சிறையில் பூத்த சின்ன மலர்’ மற்றும் ‘வில்லு’ படங்களில் பாடகியாகவும், ‘உழைத்து வாழ வேண்டும்’ என்ற படத்தின் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘தமிழ்நாடு மாநில திரைப்பட விருதையும்’, ‘பூவெல்லாம் உன் வாசம்’ மற்றும் ‘ஒரி நீ பிரேம பங்கரம் கனு’ என்ற படங்களில் சிறந்த பெண் நகைச்சுவை நடிகைக்கான ‘நந்தி விருதையும்’ பெற்றுள்ளார்.

நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் தொலைக்காட்சியில் தனது திறமையை நிருபித்துயுள்ளார். அவரது ‘என்ன இங்க சத்தம்’, ‘என்னை ஜப்பான்ல கூப்பிட்டாகோ’, ‘சிநேகிதனய்ய் சிநேகிதனய்ய் ர்ர்ரகசிய சிநேகிதனய்ய்’, ‘தொறை இங்க்லீஸ் எல்லாம் பேசுது’ போன்ற வசனங்கள் இன்று பிரபலம். திரையுலகில் சாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் சென்னைக்கு வந்த அவருக்கு, ‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க செய்து அறிமுகம் செய்து வைத்தார் பாக்கியராஜ்.

கோவை சரளா இன்று வரை யாரையுமே திருமணம் செய்து கொள்ளவில்லை. பரந்த உள்ளமும் இறக்க குணமும் நிறைந்தவர். தனது உடன்பிறந்தவர்களின் பிள்ளைகளைத் தன் பிள்ளைகளாக நினைத்து அவர்களைக் கண்டிப்போடு வளர்த்து வருகிறார். பல ஏழைக்குழந்தைகளை படிக்க வைத்து வருகிறாராம் கோவை சரளா. முதியோர் இல்லங்களுக்கும் அடிக்கடி சென்று உதவிகளும் செய்து வருகிறாராம்.

மனோரமாவிற்கு அடுத்தபடியாக ஒரு தலைச்சிறந்த நகைச்சுவையாளினியாகத் திகழும் கோவை சரளா தென்னிந்தியத் திரையுலகிற்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம் என்று சொன்னால் அது மிகையாகாது. 25 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் இருந்து வரும் அவரது இடத்தை இனி எந்தவொரு நகைச்சுவை நடிகையும் ஈடு செய்ய முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.

இந்நிலையில், இவர் நடிகர் வடிவேலுடன் இணைந்து நடித்த படங்களில் சண்டைக்காட்சியில் கோவை சரளா வடிவேலுவை அடித்து துவைத்திடுவார். அப்படி ஒரு காட்சியில் வடிவேலுவை நொங்கு நொங்குன்னு நொங்கி எடுக்கும்போது வயிற்றிலே ஓங்கி மிதித்துவிட்டராம். உடனே வடிவேலு வலிதாங்க முடியாமல் அயோ, அம்மா என்று கத்தி கதறினாராம். அதன் பின்னர் கோவை சரளாவுடன் சண்டைக்காட்சி என்றாலே மிகவும் ஜாக்கிரதையுடன் நடிப்பாராம். இதனை கோவை சரளாவே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author