டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்… அண்ணா பல்கலை அறிவிப்பு…..!!!

Estimated read time 1 min read

டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 12ஆம் தேதி இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2024-25 கல்வி ஆண்டில் எம்பிஏ மற்றும் எம்சிஏ பட்ட மேற்படிப்புகளில் சேர்வதற்கான டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும்.

வருகின்ற மார்ச் ஒன்பதாம் தேதி தேர்வு நடைபெற உள்ள நிலையில் மாணவர்கள் https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதள முகவரியில் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதுவரை 30,000 மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author