பொறியியல் கலந்தாய்வு ஜூலை 22-ம் தேதி முதல் தொடங்குகிறது!

Estimated read time 1 min read

பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியான நிலையில், தகுதியான மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 22-ம் தேதி முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த மே மாதம் 6-ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 12-ம் தேதி நிறைவடைந்தது.

ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 53,954 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் அதில் 1 லட்சத்து 99,868 விண்ணப்பங்கள் தகுதி உள்ளதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், 2024-2025 ஆம் ஆண்டிற்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை, தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் ஆணையர் வீரராகவ ராவ் வெளியிட்டார்.

பொறியியல் தரவரிசை பட்டியலில் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண்ணை 65 மாணவர்கள் பெற்றுள்ளனர். இதையடுத்து பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 22 -ம் தேதி தொடங்கி செப்டம்பர் 3-ம் தேதி வரை மூன்று கட்டங்களாக நடைபெறும் என வீரராகவ ராவ் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author