மடிக்கணினியில் CBSE பிளஸ் 2 தேர்வெழுதி மாணவி சாதனை!

Estimated read time 1 min read

கன்னியாகுமரியில் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வை முதன்முதலாக மடிக்கணினியில் எழுதி, 90 சதவிகித மதிப்பெண்கள் எடுத்து பார்வை மாற்றுத்திறனாளி மாணவி சாதனை படைத்துள்ளார்.

மருதூர்குறிச்சியை சேர்ந்த எட்வின் ஜோஸ்- ஜெபசிலின் விஜிலா தம்பதியினரின் மகள் ஏஞ்சலின் லிப்பிகா. பார்வை மாற்றுத்திறனாளியான இவர், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் +2 பொதுத்தேர்வு எழுதியுள்ளார்.

உதவியாளர் இன்றி மடிக்கணினி மூலம் தேர்வு எழுதிய மாணவி ஏஞ்சலின் லிப்பிகா, 449 மதிப்பெண்கள் எடுத்து தேசிய அளவில் 2வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author