10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு.. வெளியான முக்கிய அறிவிப்பு.!

Estimated read time 1 min read

10th Supplementary Exam : 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதுபவர்கள் மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று (மே 10) வெளியானது. தமிழகத்தில் மொத்தம் 9,10,024 மாணவர்கள் தேர்வு எழுதினர். ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 91.55 ஆக உள்ளது. சுமார் 75 ஆயிரம் மாணவர்கள் இந்த தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர்.

தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்கள் வரும் ஜூலை மாதம் நடைபெறும் துணை தேர்வுகளை எழுத இன்று அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் மே மாதம் 16ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 1ஆம் தேதி வரையில் துணை தேர்வு எழுதுபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வில் தோல்விடையடைந்தவர்கள், தேர்வுக்கு வரதவர்கள் மட்டுமல்லாது துணை தேர்வு மூலம் 10ஆம் வகுப்பு தேர்வை முதன் முறையாக எழுத தகுதியுள்ள நபர்களும் இதில் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

துணை தேர்வு எழுத உள்ளவர்கள், வரும் மே 16 முதல் ஜூன் 1 வரையில் ஞாயிற்று கிழமைகள் தவிர்த்து மற்ற தினங்களில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையில் மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலோ, தனி தேர்வர்கள் அதற்கான கல்வி மையங்களிலோ சென்று ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான மேலும் விவரங்களை www.dge.tn.gov.in என்ற தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

இதற்கான தேர்வு கட்டமாக 125 ரூபாயும், ஆன்லைன் சேவை கட்டணம் 75 ரூபாய் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை அந்தந்த கல்வி மையங்களில் பணமாக செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

துணைத்தேர்வு அட்டவணை…

02.07.2024 – மொழிப்பாடம் (தமிழ்).
03.07.2024 – ஆங்கிலம்.
04.07.2024 – கணிதம்.
05.07.2024 – அறிவியல்.
06.07.2024 – விருப்ப பாடம்.
08.07.2024 – சமூக அறிவியல்.

Please follow and like us:

You May Also Like

More From Author