9 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ‘Dating And Relationship’ பாடம்… CBSE விளக்கம்…!!!

Estimated read time 1 min read

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் 9ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் Dating and relationship என்ற தலைப்பிலான பாடம் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

இந்தப் பாடம் பள்ளி மாணவர்களின் பாட புத்தகத்தில் இடம் பெற்றதை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் சிபிஎஸ்இ வாரியம் தன்னுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இதற்கு விளக்கம் அளித்துள்ளது.

அதில், சமூக வலைத்தளங்களில் பரவக்கூடிய தகவல் முற்றிலும் தவறானது. ஆதாரம் அற்றது. பரவி வரும் பாடத்திட்டத்தின் உள்ளடக்கம் ககன் தீப் கவுர் எழுதிய சுய விழிப்புணர்வு, அதிகாரம் அளிப்பதற்கான வழிகாட்டி என்ற நூலில் இருந்து வெளியிடப்பட்டுள்ள பாடத்திட்டம் ஆகும்.

இதனை CBSE வாரியம் வெளியிடவில்லை. மேலும் எந்த தனியார் பதிப்பக புத்தகங்களையும் சிபிஎஸ்இ பரிந்துரை செய்யவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author