அன்புள்ள அப்பா.

Estimated read time 0 min read

Web team

thumbnail_rrk2.jpg

அன்புள்ள அப்பா ! கவிஞர் இரா .இரவி
அறிவு தந்த அன்புள்ள அப்பா நீங்கள்
ஆற்றல் ஈந்த அன்புள்ள அப்பா நீங்கள்
உருகும் உன்னத மெழுகு நீங்கள்
தேயும் ஒப்பற்ற சந்தனம் நீங்கள்
தன்னலமற்ற தியாகத்தின் சின்னம் நீங்கள்
திறமைகளை பயிற்று வித்த ஆசான் நீங்கள்
சான்றோனாக்கி மனம் மகிழ்ந்தவர் நீங்கள்
சந்தோசங்களை வழங்கிய வள்ளல் நீங்கள்
ஒய்வறியாது உழைக்கும் செம்மல் நீங்கள்
ஒரு நாளும் கவலை கொள்ளாதவர் நீங்கள்
கடமையைக் கச்சிதமாய் முடித்தவர் நீங்கள்
மடமையை முழுமூச்சாய் எதிர்த்தவர் நீங்கள்
பகுத்தறிவை எனக்கு கற்பித்தவர் நீங்கள்
மூடநம்பிக்கை அகற்றி தன்னம்பிக்கை தந்தவர் நீங்கள்
எதையும் ஏன்? ஏதற்கு? எப்படி? என்றவர் நீங்கள்
எவருக்கும் அஞ்சாமல் வாழ்பவர் நீங்கள்
வாழ்வியல் கருத்துக்களை வழங்கியவர் நீங்கள்
வாழ்வாங்கு வாழ்ந்து காட்டுபவர் நீங்கள்
உலகிற்கு வரக் காரணமானவர் நீங்கள்
உலக அறிவை உணர்த்தியவர் நீங்கள்
“அப்பா” உறவிற்கு இலக்கணம் வகுத்தவர் நீங்கள்
அன்பை பொழிவதில் இமயத்திற்கு நிகர் நீங்கள்

Please follow and like us:

You May Also Like

More From Author