உங்கள் வாழ்நாள்

Estimated read time 0 min read

Web team

IMG_20240424_152444_002.jpg

உங்கள் வாழ்நாள் உங்கள் கைகளில் உணருங்கள் !
கவிஞர் இரா .இரவி !

சர்க்கரை நோய் உள்ளதா சோதனை செய்யுங்கள் !
சர்க்கரை கூட இருந்தால் கவனமாக வாழுங்கள் !

தினமும் நடைப்பயிற்சி செய்திட மறக்காதீர்கள் !
தினமும் காலை மாலை இருவேளை நடந்திடுங்கள் !

சர்க்கரை நோயை அலட்சியம் செய்யாதீர்கள் !
சர்க்கரை கவனிக்காவிடில் துன்பம் உணர்ந்திடுங்கள் !

அரிசி சோற்றை ஒரு வேளை மட்டும் உண்ணுங்கள் !
இரவில் கோதுமையில் வித்தியாசமாய் உண்ணுங்கள் !

தொற்றுநோயல்ல சர்க்கரை நோய் அறிந்திடுங்கள் !
தொற்று தொட்டு வந்த பழக்கம் மாற்றுங்கள் !

பாவத்தால் சாபத்தால் வருவதில்லை அறிந்திடுங்கள் !
பரம்பரையாக சிலருக்கு மட்டும் வரும் உணர்ந்திடுங்கள் !

சர்க்கரை அளவைக் குறைத்திட முயலுங்கள் !
சர்க்கரையைக் குறைப்பது உங்கள் கைகளில் !

மனக்கவலை இருந்தால் உடன் அகற்றுங்கள் !
மனக்கவலையும் சர்க்கரையை கூட்டும் அறிந்திடுங்கள்

கவலை கொள்வதால் கவலை நீங்காது தெரிந்திடுங்கள் !
கவலை நீக்கி மனதை மகிழ்வாக வைத்திடுங்கள் !

சர்க்கரை அளவு அதிகமானால் அச்சப்படாதீர்கள் !
சர்க்கரை அளவு குறைத்திடலாம் முயலுங்கள் !

புகைபிடிக்கும் பழக்கம் இருந்தால் நிறுத்திடுங்கள் !
மது குடிக்கும் பழக்கம் இருந்தால் ஒழித்திடுங்கள் !

உணவு முறையில் மாற்றம் செய்யுங்கள் !
உடற்பயிற்சியால் சர்க்கரையைக் குறைக்கலாம் !

உடலில் காயம் நேராமல் கவனமாக இருங்கள் !
உடன் ஆறாது வரும் புண் உணருங்கள் !

சோற்றை சுருக்கி காய்கறிகளைப் பெருக்கிடுங்கள் !
சோம்பல் விடுத்தது சுறுசுறுப்பைப் பெற்றிடுங்கள் !

மூன்று வேளை உணவை நான்கு வேளையாக்குங்கள் !
முடிந்த மட்டும் உணவை குறைவாக உண்ணுங்கள் !

இன்னும் கொஞ்சம் இடம் இருக்கையில் எழுந்திடுங்கள் !
இனிமையாக இருந்தாலும் அதிகமாக உண்ணாதீர்கள் !

பயிறு வகைகளை அவித்து தினமும் உண்ணுங்கள் !
பயனற்ற தீங்கு தரும் நொறுக்குத் தீனி தவிர்த்திடுங்கள் !

இனிப்பு வகைகளை அறவே வெறுத்து ஒதுக்கிடுங்கள் !
இனிப்பு உயிர் கொல்லும் நஞ்சென நினையுங்கள் !

அசைவமும் சர்க்கரை அளவை கூட்டும் அறிந்திடுங்கள் !
அசைவத்திலிருந்து சைவத்திற்கு மாறி விடுங்கள் !

தீராத நோயென்று தவறான முடிவுக்கு வராதீர்கள் !
தீர்ந்திடும் நோய்தான் தீர்ப்பதும் நீங்கள்தான் உணருங்கள் !

சர்க்கரையின் அளவை குறைக்க வழி காணுங்கள் !
சர்க்கரை குறையும் இவற்றை செய்து பாருங்கள் !

இரவில் வெண்டிக்காய் வெட்டி நீர் ஊற்றுங்கள் !
இரவு விடிந்ததும் நீரை மற்றும் பருகுங்கள் !

இரவில் நெல்லிக்காயை நறுக்கி நீர் ஊற்றுங்கள் !
இரவு விடிந்ததும் நீரை மற்றும் பருகுங்கள் !

உலக அளவில் இந்தியாவில் அதிகம் சர்க்கரை நோயாளிகள் !
உடனே முயன்று சர்க்கரை அளவை குறைத்திடுங்கள் !

உங்கள் வாழ்நாள் உங்கள் கைகளில் உணருங்கள் !
உங்கள் உடல் நலம் பேணுவது கடமை அறிந்திடுங்கள் !

Please follow and like us:

You May Also Like

More From Author