உனது விழிகளில்

Web team

eyes.jpg

பொய்யுரைக்கும் என்பான் கவி
உன் மைதீட்டிய விழிகள்…
என்றாலும்

மண்ணாளும் மைந்தரும்
விண்ணாளும் வேந்தரும்
உன் விழி அசைவில்
என்னாளும் வீழ்வான்,

புன்னகைப் பெண்ணே..
விழி வாள் கொண்டு வீழ்த்தி
வாகை சூடும் உனை வாழ்த்தி
பாவொன்று பாட நேர் கொண்டு
நிமிர்ந்தேன்.. அடடா என் பார்வையில்

அலைகளின் தாகம்
மழை மேகத்தின் மோகம்
புயல்களின் கோபம் -உன்
கண்ணில் நான் கண்டேன்!

Please follow and like us:

You May Also Like

More From Author