என்னவளே

Estimated read time 0 min read

Web team

IMG_20240202_145305.jpg

என்னவென்பது அவளை என்னவளை ! கவிஞர் இரா .இரவி

கருப்பு அழகி என்பதா ?
கண் அழகி என்பதா ?

புருவ அழகி என்பதா ?
பருவ அழகி என்பதா ?

காது அழகி என்பதா ?
மூக்கு அழகி என்பதா ?

சிகை அழகி என்பதா ?
சிரிப்பு அழகி என்பதா ?

இதழ் அழகி என்பதா ?
இடுப்பு அழகி என்பதா ?

கை அழகி என்பதா ?
கால் அழகி என்பதா ?

சொல் அழகி என்பதா ?
சுவை அழகி என்பதா ?

நடை அழகி என்பதா ?
உடை அழகி என்பதா ?

உடல் அழகி என்பதா ?
ஊடல் அழகி என்பதா ?

கூர்மதி அழகி என்பதா ?
கூடல் அழகி என்பதா ?

பெயர் அழகி என்பதா ?
என்னவென்பது அவளை ! என்னவளை !

பேரழகி என்பதே பொருத்தம் !
பிரபஞ்ச அழகியும் தோற்பாள் இவளிடம் !

Please follow and like us:

You May Also Like

More From Author