என்றும் நீ என்னோடுதான்.

Estimated read time 0 min read

Web team

kavingar_ravi.jpg

என்றும் நீ என்னோடுதான் இரா. இரவி

என்னைவிட்டு நீ பிரிந்தாலும்
என்றும் நீ என்னோடுதான்
உன்னைப் பற்றிய நினைவுகள்
எந்தன் உயிரில் கலந்த உறவுகள்
உயிர் உடல் விட்டு பிரியும் வரை
உன் நினைவு என்னை விட்டு அகலாது
பசுமாடு இரையை அசைபோடும்
பாவை உன் நினைவை அசைபோடும் நான்
பசுமரத்து ஆணி போல பதிந்தது
பாசம் மிகுந்த உந்தன் பரவச விழிகள்
கணினியில் நிற்கும் முகப்புப்படம் போல
காளை எந்தன் இதயத்தில் நிற்கும் நின் உருவம்
ஒலி நாடாவில் பாடல் கேட்டு இன்புறுவது போல
உந்தன் நினைவுகளை நினைத்து இன்புறுகிறேன்
வாழ்வில் நடந்த நிகழ்வுகள் ஆயிரம்
வஞ்சி உன் சந்திப்பு நிகழ்வு கல்வெட்டானது
ஆயிரம் மைல்களுக்கு அப்பால் நீ வாழ்ந்தாலும்
அருகில் என் அருகில் நினைவில் வாழ்கிறாய்
என்னைப் போல எப்போதும் நினைக்காவிட்டாலும்
என்னை நீ எப்போதாவது நினைப்பாய் நிஜம்
உன்னைப் பார்க்க நீ தடைவிதிக்கலாம்
உன்னை நினைக்க நீ தடைவிதிக்க முடியாது.

Please follow and like us:

You May Also Like

More From Author