எலிகளுக்கு விடுதலை பூனைகளால் கிடைக்காது

Estimated read time 1 min read

Web team

IMG_20240509_130829_295.jpg

எலிகளுக்கு விடுதலை பூனைகளால் கிடைக்காது – கவிஞர் இரா.இரவி

எலிகளுக்கு விடுதலை பூனைகளால் கிடைக்காது
பெண்களுக்கு விடுதலை ஆண்களால் கிடைக்காது
மண் புழுவாய்ப் நெளிந்தது போதும்
பெண் புலியாய்ப் புறப்படு நாளும்
புழுவைக்கூட சீண்டினால் சீற்றம் வரும்
பெண்ணே! உனக்கு சீற்றம் எப்போது வரும்
கொட்டக் கொட்ட குனிந்தது போதும்
புராணப்புளுகை நம்பியது போதும்
புதுமைக்கருத்தை ஏற்றிட வேண்டும்
ஆண்கள் என்பதால் ஆணவம் கொள்வதும் ஏன்?
பெண்கள் என்பதால் அடிமைப்படுத்துவதும் ஏன்?
அடிமை விலங்கைத் தகர்த்திடல் வேண்டும்
அற்புதச்சிறகை விரித்திடல் வேண்டும்
ஆணுக்குள்ள சுதந்திரம் பெண்ணுக்கும் வேண்டும்
அர்த்தமற்ற சுதந்திரம் யாருக்கு வேண்டும்
புதியதோர் உலகம் செய்திடல் வேண்டும்
புதுமைப் பெண்கள் அதனை ஆள வேண்டும்
பெண் இல்லையேல் நீயுமில்லை நானுமில்லை கவிஞர் இரா.இரவி
பெண் இல்லையேல்
நீயுமில்லை
நானுமில்லை
ஊருமில்லை
உலகுமில்லை
பெண் பிறந்தால்
பேதலிப்பதில்
நியாயமில்லை
பெண் என்ன?
ஆண் என்ன?
பெண்ணே
இல்லாத
உலகத்தில்
வாழமுடியுமா?
உங்களால்…
எல்லோருமே
ஆண் பெற்றால்
எவர்தான்
பெண்பெறுவது
ஆணைப்
பெற்றதால்
அவதிப்பட்டவர்
கோடி
பெண்ணைப்
பெற்றதால்
பெருமையுற்றவர்
கோடி
மணமானதும்
மறப்பவன் ஆண்!
மணமானாலும்
மறக்காதவள்
பெண்!
ஓருபோதும்
வருந்தாதே
பெண்ணிற்கு.
துளிப்பா கவிஞர் இரா.இரவி

எழுத்திலும் அநீதி
ஆண் நெடில் தொடக்கம்
பெண் குறில் தொடக்கம் !

அன்று அநீதி
ஆணுக்கு கைச் சிலம்பு
பெண்ணுக்கு காலச் சிலம்பு !

பெண்ணுரிமைப் பற்றிப் பேசிவிட்டு வந்து
எதிர்த்துப் பேசிய இல்லத்தரசியை
எட்டி உதைத்தார் !

ஆடு மாடுக்குப் பெண் பிறந்தால் மகிழ்ச்சி
பெண்ணிற்குப் பெண் பிறந்தால்
ஏன் ? இகழ்ச்சி !

கருவறையிலேயே கல்லறைக் கட்டும் அவலம்
இன்றும் தொடர்வது
இந்திய அவமானம் !

தாய்ப்பாலுக்குப் பதில்
கள்ளிப்பால் தரும் கொடுமை
மடமையை ஒழியட்டும் !

ஜான் பிள்ளை என்றாலும் ஆண் பிள்ளையென்று
பிஞ்சிலேயே ஆணாதிக்கம் விதைப்பதை
நிறுத்துங்கள் !

பெண் புத்தி பின் புத்தி அல்ல
பெண் புத்தி சிறந்த உத்தி
ஆறு நூறாகும் !

Please follow and like us:

You May Also Like

More From Author