ஒரு விதையின் வினா.

Estimated read time 0 min read

Web team

IMG_20240401_112627_907.jpg

ஒரு விதையின் வினா கவிஞர் இரா .இரவி

பறவை ஒன்று பழத்தைத் தின்று
கொட்டையை விட்டுச் சென்றது !

மண்ணில் விழுந்த நான்
மழை நீரால் துளிர்த்து வளர்ந்தேன் !

நான் வளரக் காரணமான மழை
வரக் காரணமானேன் நான் !

உனக்கு நிற்க நிழல் தந்தேன்
நீ புசிக்க நல்ல பழங்கள் தந்தேன் !

நீ சுவாசிக்கத் தூயக் காற்றுத் தந்தேன்
உந்தன் நோய் தீர்க்கும் மருந்து தந்தேன் !

பறவைகளும் வந்து அமர்ந்து
பழம் தின்று பறந்து சென்றன !

நன்றி மறந்து என்னை பணத்திற்காக
நீ விலைப் பேசி விற்று விட்டாய் !

என்னை வாங்கியவன் வருகிறான்
இரக்கமின்றி வெட்டக் கோடாரியோடு !

என்னை விற்ற உன்னிடம் ஒரு கேள்வி
என்னை விட்டுச் சென்றது ஒரு பறவை !

என்னை நட்டவன் நீ இல்லை
என்னை விற்க உனக்கேது உரிமை !

Please follow and like us:

You May Also Like

More From Author