காடு அதை நாடு.

Estimated read time 0 min read

Web team

IMG_20240321_190259.jpg

உலக காடுகள் தினம் ! 21.3.2014

காடு அதை நாடு ! இரா .இரவி !

காடு அதை நாடு அங்குள்ள

விலங்குகளை வதைக்காமல் நாடு !
மரங்களை வெட்டாமல் நாடு !

நோய் நீங்க வனம் செல் !
சுடுகாடு செல்வதைத் தள்ளிப்போட வனம் செல் !

தூய காற்றை சுவாசிக்க வனம் செல் !
தன்னம்பிக்கை வளர்த்திட வனம் செல் !

விலங்குகளின் பெருமை அறிய வனம் செல் !
வேதனைகளை மறந்திட வனம் செல் !

பச்சைப் பசுமை ரசிக்க வனம் செல் !
பறவைகள் வகை தெரிந்திட வனம் செல் !

அருவிகளின் வாசம் நுகர்ந்திட வனம் செல் !
மலைகளின் வனப்பு ரசித்திட வனம் செல் !

மன அழுத்தம் குறைய வனம் செல் !
மகிழ்ச்சி மனதில் பெருக வனம் செல் !

கோபம் தணித்து சாந்தி பெற வனம் செல் !
கள்ளம் கபடம் ஒழிய வனம் செல் !

இயற்கை ரசிக்க வனம் செல் !
செயற்கை மறந்து களிப்புற வனம் செல் !

உடலுக்கு சுகம் பெற வனம் செல் !
உள்ளத்திற்கு வளம் பெற வனம் செல் !

அரிய விலங்குகளை அறிய வனம் செல் !
அற்புத உயிரினங்களைத் தெரிய வனம் செல் !

துன்பங்களை மறந்து மகிழ்வுற வனம் செல் !
துயரங்களைத் துறந்து துணிவு பெற வனம் செல் !

மரங்களின் மகத்துவம் அறிய வனம் செல் !
அறங்களின் மேன்மை புரிய வனம் செல் !

விழி இரண்டு போதாது வனம் ரசிக்க !
கை இரண்டு போதாது மரம் தழுவ !

மனிதா அழித்த காடுகள் போதும் !
மனிதா அழித்த விலங்குகளும் போதும் !

காடுகளை அழியாமல் காப்போம் !
காற்றுகளை மாசின்றி காப்போம் !

வனம் சென்றால் ரசித்து வா !
மனம் செம்மையாகும் சிந்தித்து வா !

Please follow and like us:

You May Also Like

More From Author