காதல் அருமை

Estimated read time 1 min read

Web team

காதலே ! கவிஞர் இரா .இரவி

கை கூடியவர்களுக்கு
உன் அருமை புரியவில்லை
கை கூடாதவர்களுக்கு
உன் பெருமை மறக்கவில்லை
——————————————————
திரைப்படத்தில் கை தட்டுவோம்
சொந்த வீட்டில் கை முறிப்போம்
——————————————————-
அன்றும்இன்றும் என்றும்
கவிஞர்களின் பாடுபொருள்
———————————————- ——-
நிலவும் நீயும் ஒன்று
தூரத்தில் மிக அழகு
———————————————–
ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும்
சகோதரி , மகள் வயப்பட்டால்
பிடிக்கவே பிடிக்காது .
———————————————–
சமந்தப்பட்ட்வர்களுக்கு மகிழ்ச்சி
சமந்தமில்லாதவர்களுக்கு இகழ்ச்சி
—————————————————
கண் இல்லை உண்மை
கண் இல்லாதவர்களும்
வயப்படுகிறார்கள்
—————————————————-
வென்றால் வாழ்க்கை
தோற்றால் சுவடு

Please follow and like us:

You May Also Like

More From Author