குடும்பச்சுமை!

Estimated read time 0 min read

Web team

IMG-20240309-WA0075.jpg

குடும்பச்சுமை ! கவிஞர் இரா .இரவி !

கனக்கவில்லை தலைச்சுமை
கனத்தது நெஞ்சம்
குடும்பச்சுமை !

சுமை சுமையே இல்லை
சுமையும் சுகமே
குடும்பச்சுமை !

ஏழைகளின்
கவலைக்காரணி
குடும்பச்சுமை !

கூட்டுக்குடும்பம்
உடைந்ததால் கனத்தது
குடும்பச்சுமை !

குடும்பத்தலைவன்
தலையில் வந்தது
குடும்பச்சுமை !

எண்ணிக்கை குறைந்தும்
குறையவில்லை
குடும்பச்சுமை !

விலைவாசி ஏற்றம்
மேலும் பாரம்
குடும்பச்சுமை !

கொக்கின் தலையில்
பனங்காய்
குடும்பச்சுமை !

வாழ்க்கையில் போராட்டமல்ல
போராட்டமே வாழ்க்கையாக
குடும்பச்சுமை !

இயேசுவின் சிலுவையின்
சுமக்கின்றனர்
குடும்பச்சுமை !

தனிக்கட்டைகளுக்கு
என்றுமில்லை
குடும்பச்சுமை !

குடிகாரக் கணவனால்
மனைவியின் தலையில்
குடும்பச்சுமை !

பகிர்ந்துக் கொண்டால்
பாரம் குறையும்
குடும்பச்சுமை ! கவிஞர் இரா.இரவி.

அரசியல்வாதிகளின் ஊழல்
பொதுமக்கள் தலையில்
குடும்பச்சசுமை !

Please follow and like us:

You May Also Like

More From Author