குதிரை

Estimated read time 0 min read

Web team

IMG_20240426_114921_539.jpg

குதிரை ! கவிஞர் இரா .இரவி !
தொடர்ந்து ஓடும்
தொய்வின்றி ஓடும்
குதிரை !
பற்களால் யாரையும்
கடிப்பது இல்லை
குதிரை !
கொம்புகள் கிடையாது
குத்துவதும் கிடையாது
குதிரை !
ஆற்றல் விரையம் இல்லை
ஆகவே சோர்வும் இல்லை
குதிரை !
சண்டை போடாது
சஞ்சலம் அடையாது
குதிரை !
கடினமாக உழைத்த போதும்
உண்பதில்லை அசைவம்
குதிரை !
கண்களை மூடினாலும்
கவலை கொள்ளாது
குதிரை !
போட்டியில் ஓடினாலும்
பக்கத்தை பார்க்காது
குதிரை !
குறிக்கோள் அடைய
வேகமாக ஓடும்
குதிரை !
பயணம் செய்வதில்
பயம் கொள்ளாது
குதிரை !
மின்சார மோட்டாருக்கும்
சக்தியின் அளவு
குதிரை !

Please follow and like us:

You May Also Like

More From Author