குருவிகள்.

Estimated read time 0 min read

Web team

IMG_20240318_084340_994.jpg

உலக குருவிகள் தினம் !

குருவிகள் !கவிஞர் இரா .இரவி !

வீடு இடிக்கப்பட்டு கூடு சிதைந்தது
மனம் தளராமல் மறுபடியும்
குருவிகள் !

கைகள் இன்றி கட்டின கூடுகள்
மிக அழகாக
குருவிகள் !

வான் பறப்பதில் சிறியன
மக்கள் மனதில் பெரியன
குருவிகள் !

பார்ப்பதற்கு அலகோ
அழகோ அழகு
குருவிகள் !

உருவத்தால் சிறிது
உணர்வால் பெரிது
குருவிகள் !

அன்று குடும்ப உறுப்பினர்கள்
இன்று குடும்பங்களே தனித்தனி
குருவிகள் !

பறந்தால் பரவசம்
பார்த்தால் குதூகலம்
குருவிகள் !

வைக்கோல் மாட்டுக்கு உணவு
வைக்கோல் வீட்டுச் செங்கல்
குருவிகள் !

.நவீனம் மனிதனை மாற்றியது
பறவை இனத்தை அழித்தது
குருவிகள் !

செல்பேசி கோபுரங்கள் பெருகப் பெருக
குறைந்துக் கொண்டே வருகுது
குருவிகள் !

புகைப்படம் எடுத்து வைப்போம்
பேரன்களுக்குக் காட்டிட
குருவிகள் !

Please follow and like us:

You May Also Like

More From Author